Home > Punggol Experience > IP Departments > Mother Tongue > Tamil Language

Tamil Language

சுவாசிப்போம், நேசிப்போம்

தாய்மொழித்துறை


தமிழ் மொழி:

தாய்மொழிக் கல்வியின் வழி வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே எனும் கவிஞர் பாரதியின் தாய்மொழிப் பற்றை இளையர்களின் மனதில் ஊன்றச் செய்வதோடு தாய் வழிக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அவர்களின் மனதில் பதிய வைப்பதே எங்கள் தலையாய நோக்கமாகும். எனவே ஒவ்வொரு இளையரும் தரமான தாய்மொழியை அவர்களின் அன்றாட எழுத்துப் பணியிலும் பேச்சு வழக்கிலும் பயன்படுத்தும் அளவிற்கு அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். இதன் மூலம் நமது இளையர்கள் தாய்மொழிக்கு புத்துயிர் கொடுப்பதுடன் அம்மொழி கற்றுக்கொடுத்த பண்புகளையும் மறவாமல் நல்ல குடிமக்களாக வாழ்வார்கள் என நம்புகிறோம். அத்துடன் தம் எதிர்காலப் பரம்பரையும் அவ்வாறு வாழ வழிவகுப்பார்கள் என்றும் உறுதியாக நம்புகிறோம்.

 

நோக்கம்

பொங்கோல் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தாய்மொழியில் கைதேர்ந்தவர்களாக உருவாகவேண்டும் என்பதுடன் பண்பாட்டிலும் சிறந்து மிளிர வேண்டும் என்பது எங்களின் நோக்கமாகும்.

 

குறிக்கோள்

பொங்கோல் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தாய்மொழி மீது கொண்ட ஆர்வத்திற்கு புத்தணர்ச்சி அளித்து அவர்களின் தாய்மொழி புலமையை மேம்படுத்துவதோடு அம்மொழி கற்றுக் கொடுக்கும் பண்புகளையும் தம் அன்றாட வாழ்வில் பின்பற்ற ஊக்கமளித்தல்.


3 முக்கிய செயல்திட்டங்கள்:

·        விரிவான மற்றும் பள்ளி அடிப்படையில் அமைந்த பாடத்திட்டம்

·        மீத்திறன் மாணவர்களுக்கான விரிவாக்கப்பட்ட பாடத்திட்டம்

·        அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் நேரடி அனுபவங்கள்

 

தமிழ்த்துறையின் நிகழ்வுகள்:

 ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கொல் உயர்நிலைப் பள்ளியின் சினர்ஜி நிகழ்ச்சியில் நடனமாடிய நம் தமிழ் மாணவிகள்.

TL -1.jpg 
தமிழ் மொழி மாதத்தை முன்னிட்டு நமது மாணவர்களுக்காக நடத்தப்பட்ட மாலை தொடுக்கும் மற்றும் தோரணம் கட்டும் பயிலரங்கில் நமது மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

1.jpg

 உயர்நிலை 4 மற்றும் 5-இல் படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை ஒட்டிய பயிலரங்கில் மற்ற பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். அப்பயிலரங்கில் ஆர்வத்துடன் பங்கேற்று நம் மாணவர்கள் பல தகவல்களைப் பெற்றனர்.

2.jpg

ஹொரைசன் தொடக்கப்பள்ளியில் நடந்த தமிழ் மொழி முகாமை வழிநடத்த உதவிக்கரம் நீட்டினார்கள் நம் உயர்நிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள். அதன் வழியாக தங்களின் தலைமைத்துவ பண்புகளை அவர்கள் வளர்த்துக்கொண்டனர்.

3.jpg

துறையில் நடக்கும் நிகழ்ச்சிகள்:

·         பொங்கல் விழா கொண்டாட்டங்கள்

·         தமிழ்மொழி மாதம் ஒட்டிய போட்டிகள்

·         இரண்டு வார தாய்மொழி விழா

·         வெளிநாடு பயணங்கள்

 தமிழ் இலக்கிய மன்றமும், தேசிய நூலகமும் இணைந்து நடத்திய கவிதைப் பட்டறையில் நம் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றதுடன் தாங்கள் இயற்றிய கவிதைகளை அவையின் முன் படைத்தும் மகிழ்ந்தனர்.

4.jpg

5.jpg

   தாய்மொழி வாரத்தை முன்னிட்டு நம் பள்ளி ஏற்பாடு செய்த நாடகப் பட்டறையில் தம் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, காண்பவரைக் களிப்புறச் செய்கின்றனர் நம் தமிழ் மாணவர்கள். 

6.jpg

7.jpg

உமறுப்புலவர் நடத்திய தமிழ் முகாமில் பல பள்ளி மாணவர்களுடன் இணைந்து பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர் நம் தமிழ் மாணவர்கள்.

8.jpg

9.jpg

தொடக்கப் பள்ளியின் (Mont Fort Primary School) தமிழ் முகாமில் பங்கேற்ற சிறார்களை வழி நடத்திய எங்கள் இளந் தலைவர்கள்.

10.jpg

11.jpg

கல்வி அமைச்சின் ஆதரவில் வாரம் 2 மணி நேரம் எனும் அளவில் 8 வாரங்கள் நடைபெற்ற திரையரங்கப் பட்டறையில் (Theater Workshop) மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறன்களை வளர்த்துக்கொண்டதோடு தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டனர்.

12.jpg

13.jpg

14.jpg

தேசிய அளவில் கவிதை எழுதும்  போட்டியில் 3-ஆவது பரிசு பெற்ற மாணவி

IMG-20140427-WA0010.jpg

தேசிய அளவில் கதை சொல்லும் போட்டியில் 3-ஆவது பரிசு பெற்ற மாணவி

      2014 இன் சாதனையாளர்கள்   

IMG-20140903-WA0025.jpg

17.jpg